Wednesday, April 18, 2018

Prophets Love for Khadija

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

A'isha reported that Hala b. Khuwailid (sister of Khadija) sought permission from Allah's Messenger (ﷺ) to see him and he was reminded of Khadija's (manner of) asking leave to enter and (was overwhelmed) with emotions thereby and said:
O Allah, it is Hala, daughter of Khuwailid, and I felt jealous and said: Why do you remember one of those old women of the Quraish with gums red and who is long dead-while Allah has given you a better one in her stead? Prophet Sallalahu Alaihiwasallam replied back saying
"Allaah Has not Granted me anyone better than her. She believed in me when people denounced me, held me truthful when people belied me and supported me with her wealth when people deprived me."
[Sahih Muslim 2437  http://sunnah.com/muslim/44/112 , Musnad Ahmed  24303,]


حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ ، قَالَ : حَدَّثَنَا عُمَرُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ مُجَالِدٍ ، قَالَ : حَدَّثَنَا أَبِي ، عَنْ مُجَالِدٍ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنْ مَسْرُوقٍ ، عَنْ عائشة رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لا يَكَادُ يَخْرُجُ مِنَ الْبَيْتِ حَتَّى يَذْكُرُ خَدِيجَةَ ، فَيُحْسِنُ عَلَيْهَا الثَّنَاءَ ، فَذَكَرَهَا يَوْمًا مِنَ الأَيَّامِ ، فَأَدْرَكَتْنِي الْغَيْرَةُ فَقُلْتُ : هَلْ كَانَتْ إِلا عَجُوزًا ، فَقَدْ أَبْدَلَكَ اللَّهُ عَزَّ وَجَلَّ خَيْرًا مِنْهَا ، فَغَضِبَ حَتَّى اهْتَزَّ مُقَدَّمُ شَعْرِهِ مِنَ الْغَضَبِ ، ثُمَّ قَالَ : " لا وَاللَّهِ مَا أَخْلَفَ اللَّهُ لِي خَيْرًا مِنْهَا ، وَقَدْ آمَنَتْ بِي إِذْ كَفَرَ بِيَ النَّاسُ ، وَصَدَّقَتْنِي وَكَذَّبَنِي النَّاسُ ، وَوَاسَتْنِي مِنْ مَالِهَا إِذْ حَرَمَنِي النَّاسُ ، وَرَزَقَنِي اللَّهُ عَزَّ وَجَلَّ الأَوْلادَ مِنْهَا ، إِذْ حَرَمَنِي أَوْلادَ النِّسَاءِ " ، قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا : فَقُلْتُ بَيْنِي وَبَيْنَ نَفْسِي : لا أَذْكُرُهَا بِسَيِّئَةٍ أَبَدًا "

In Another Hadith A'isha Radhiyallahu Anha reported whenever Allah's Messenger (ﷺ) slaughtered a sheep, he said: Send it to the companions of Khadija I annoyed him one day and said: (It is) Khadija only who always prevails upon your mind. Thereupon Allah's Messenger (ﷺ) said: Her love had been nurtured in my heart by Allah Himself.

حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا غِرْتُ عَلَى نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِلاَّ عَلَى خَدِيجَةَ وَإِنِّي لَمْ أُدْرِكْهَا ‏.‏ قَالَتْ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا ذَبَحَ الشَّاةَ فَيَقُولُ ‏"‏ أَرْسِلُوا بِهَا إِلَى أَصْدِقَاءِ خَدِيجَةَ ‏"‏ ‏.‏ قَالَتْ فَأَغْضَبْتُهُ يَوْمًا فَقُلْتُ خَدِيجَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنِّي قَدْ رُزِقْتُ حُبَّهَا ‏"‏ 


More about here: http://islamweb.net/en/article/76852/khadeejah-bint-khuwaylid-the-first-to-embrace-islam

Thursday, March 8, 2018

பள்ளிக்குச் செல்கின்ற போது (கூறப்படும்) துஆ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُوراً، وَفِي لِسَانِي نُوراً، وَفِي سَمْعِي نُوراً، وَفِي بَصَرِي نُوراً، وَمِنْ فَوقِي نُوراً، وَمِنْ تَحْتِي نُورًا ، وَعَنْ يَمِينِي نُوراً، وَعَنْ شِمَالِي نُوراً، وَمِن أَمَامِي نُوراً، وَمِنْ خَلْفِي نُوراً، وَاجْعَلْ فِي نَفْسِي نُوراً، وَأَعْظِمْ لِي نُوراً، وَعَظِّمْ لِي نُوراً، وِاجْعَلْ لِي نُوراً، وَاجْعَلْنِي نُوراً، اللَّهُمَّ أَعْطِنِي نُوراً، وَاجْعَلْ فِي عَصَبِي نُوراً، وَفِي لَحْمِي نُوراً، وَفِي دَمِي نُوراً، وَفِي شَعْرِي نُوراً، وَفِي بَشَرِي نُوراً،" ["اللَّهُمَّ اجْعَلْ لِي نُوراً فِي قَبْرِي.. وَنُوراً فِي عِظَامِي"] ["وَزِدْنِي نُوراً، وَزِدْنِي نُوراً، وَزِدْنِي نُوراً"] ["وَهَبْ لِي نُوراً عَلَى نُور

பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என்  நாவில் ஒளியை ஏற்படுத்துவாயாக , என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக.  எனக்கு கீழிலிருந்தும் ஒளியை ஏற்படுத்துவாயாக.  என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப்பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் மனதிலும் ஒளியை  ஏற்படுத்துவாயாக. எனக்கு ஒளியை பெரிதாக்குவாயாக! ஒளியை எனக்குப் பிரம்மாண்டமானதாகவும் ஆக்குவாயாக! எனக்கு ஒளியை நல்குவாயாக!
என்னையே ஒளியாக்கி வைப்பாயாக. என் நரம்பிலும், என் சதையிலும் என் இரத்தத்திலும், என் ரோமத்திலும் என் சருமத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக
என்னுடைய கப்ரில் ஒளியை மற்றும் எலும்புகளில், ஒளியை நீ ஆக்குவாயாக! எனக்கு ஒளியை அதிகமாக்கிடுவாயாக! (மும்முறை). ஒளிக்கு மேல் ஒளியை எனக்கு அன்பளிப்பு செய்வயாக!

[புகாரி:6316, முஸ்லிம்:1399,திர்மிதி: 3419, அதபுல் முஃப்ரத்: 695, பத்ஹுல் பாரீ:11/118]


Wednesday, January 31, 2018

வானவியல் கல்வியை கற்பது

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

ஷெய்க் யஹ்யா ஸில்மி கூறுகிறார், 
"வானவியல் கல்வியின் மூலமாக சூரியனும் சந்திரனும் இவ்வாறு நகரும், மேலும் கிரகணங்கள் இந்த குறிப்பிட்ட நாளில் இவ்வளவு நேரம் ஏற்படும் என்று முன்அறிவிப்பு செய்வது தவறும், குஃப்ரும் ஆகும்."
https://ahlulhadith.in/ta/posts/-L4Wof6BvrmwUtZmh582/astronomy-eclipes-prayer

அதற்கு ஆதாரமாக கீழ்கண்ட ஹதீஸை மேற்கோள் காட்டுகிறார். இது முற்றிலும் தவறாகும்

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُسَدَّدٌ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الأَخْنَسِ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنِ اقْتَبَسَ عِلْمًا مِنَ النُّجُومِ اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ زَادَ مَا زَادَ ‏"

அப்துல்லாஹ் இப்ன் அப்பாஸ்(ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்:

"நட்சத்திரக்கலை அறிவை வளர்த்குக் கொண்டவர், சூனியத்தின் ஒரு பிரிவை வளர்த்துக் கொண்டவராவார். தான் அதிகமாக விரும்புவதை அதில் அதிகமாக்குவார்" என்று நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறினார்கள். (அபுதாவூது:3905, இப்ன் மாஜா:3726, ரியாளுஸ்ஸாலிஹீன்:1671)

Astrology என்பது வானசாஸ்திர கல்வி, Astronomy என்பது வானவியல் கல்வி


மேற்கூறப்பட்ட ஹதீஸ் வானசாஸ்திர கல்வியை பற்றியதே அல்லாமல் வானவியல்  கல்வியை பற்றியது அல்ல.


மிதை பற்றிய ஷரஹ் ஹதீஸ் கீழ்கண்ட முகவரியில் பார்கவும்:

வானசாஸ்திர கல்வியை கற்பது (Astrology)
வானசாஸ்திர கல்வி என்பது நட்சத்திரங்களின் ஓட்டத்தை, உலக நடப்புகள், காரியங்கள் ஆகியவற்றுடன் தொடர்புப்படுத்துவது. இதனை மூன்று வகையில் பிரிக்கலாம்.
.1 - நட்சத்திரங்கள் நேரடியாகவே நடப்புகளை தீர்மானிக்கின்றன என நம்புவது ஷிர்க்காகும். இது ஒருவரை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும்.
2 - நட்சத்திரங்களின் ஓட்டத்தை வைத்து வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். இந்த நட்சத்திரம் இங்கு வந்தால் வாழ்க்கை செழிப்பாகும். இங்கு வந்தால் வாழ்க்கை வீணாகும் என்று மறைவான ஞானத்தை கொண்டு வாதிடுவது. இவ்வாறு வாதிடுவது குஃப்ராகும்.
3 - மனித வாழ்க்கையின் நடப்புகளுக்கும் மாற்றங்களுக்கும் நட்சத்திரங்களின் ஓட்டம் காரணமாக மட்டுமே இருக்கிறது. நட்சத்திரங்கள் மாற்றத்திற்கு நேரடியாக இல்லாமல், மாற்றங்களுக்கு வெறும் காரணமாகவே மட்டும் உள்ளது என நம்புவது. இது சிறிய ஷிர்க் ஆகும்.
இதுபோன்ற காரணங்களின் அடிப்படையில் மார்க்கம் வானசாஸ்திர கல்வியை கற்பதை ஹராம் என கூறுகிறது.

வானவியல் கல்வியை கற்பது (Astronomy):
1 - மார்க்க விவகாரங்களான கிப்லாவை அறிவது, நேரத்தை அறிவது போன்றவற்றிக்காக வானவியல் கல்வியை வைத்து கூறுவது அனுமதிக்கப்பட்டதாகும். வானவியல் கல்வியை வைத்து தான் அறிய வேண்டிய நிலை ஏற்பட்டால் அதனை கற்பது கட்டாயமாகும்.

2 - பாதைகள் மற்றும் வழிகளை அறிவதற்காக வானவியல் கல்வியை அறிவது அனுமதிக்கப்பட்டதாகும்.
وَعَلامَاتٍ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ16:16. (வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள்.

رُوِيَ عَنْ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُ - أَنَّهُ قَالَ : تَعَلَّمُوا مِنَ النُّجُومِ مَا تَعْرِفُونَ بِهِ الْقِبْلَةَ وَالطَّرِيقَ ثُمَّ أَمْسِكُوا كَذَا فِي الْمِرْقَاةِ கிப்லாவையும், பாதையையும் நட்சத்திரத்தை வைத்து அறிந்துகொள்ளுங்கள் என உமர் இப்ன் கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) கூறுயுள்ளார்கள்.

வானவியல் கல்வியை கற்று கிப்லாவை அறிவது, தொழுகைக்கான நேரத்தை அறிவது அனுமதிக்கப்பட்ட கல்வியாகும் என்பதில் அனைத்து ஃபிக்ஹ் அறிஞர்களும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள். இமாம் அபுஹனிஃபா ரஹ், இமாம் மாலிக், இமாம் ஷாஃபி இமாம அஹமத் பின் ஹம்பல் இதனை கற்பதை ஃபர்ளு கிஃபாயா என்று கூறியுள்ளார்கள்.

மேலுள்ள தகவல்களை ஷெய்க் உஸைமீன் ரஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். பார்க்க
https://ar.islamway.net/…/%D9%85%D8%A7-%D8%AD%D9%83%D9%85-%…

ஃபத்ஹுல் பாரியில் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ் அவர்கள் இமாம் இப்னு தகீக் அல்ஈத் அவர்களின் கூற்றை பதிவு செய்துள்ளார்கள். அதில் வானவியில் அடி்பபடையில் கணக்கிட்டு கிரகணத்தை அறிவதை தவறில்லை என்று கூறியுள்ளார்கள். பார்க்க (2:537)
وقال بن دقيق العيد ربما يعتقد بعضهم أن الذي يذكره أهل الحساب ينافي قوله يخوف الله بهما عباده وليس بشيء لأن لله أفعالا على حسب العادة وأفعالا خارجة عن ذلك وقدرته حاكمة على كل سبب فله أن يقتطع ما يشاء من الأسباب والمسببات بعضها عن بعض وإذا ثبت ذلك فالعلماء بالله لقوة اعتقادهم في عموم قدرته على خرق العادة وأنه يفعل ما يشاء إذا وقع شيء غريب حدث عندهم الخوف لقوة ذلك الاعتقاد وذلك لا يمنع أن يكون هناك أسباب تجري عليها العادة إلى أن يشاء الله خرقها وحاصله أن الذي يذكره أهل الحساب إن كان حقا في نفس الأمر لا ينافي كون ذلك مخوفا لعباد الله تعالى


ஷெய்க் ஃபவ்ஸான் ஹபிலஹுல்லாஹ் அவர்களின் பதிவு
மாதங்கள், ஆண்டுகள், நாட்களின் கணக்குகளை போன்றவற்றை அறிவதற்கான (வானவியல்) கல்வியை அறிவதும், மழை பொழிவதற்கான நேரம், அறுவடை காலம் போன்றவற்றை அறிவது நட்சத்திரக் கல்வியல் (வானசாஸ்திரத்தில்) வருமா
பதில் மாதங்கள், ஆண்டுகள், நாட்களின் கணக்குகளை போன்றவற்றை அறிவதற்கான (வானவியல்) கல்வியை அறிவது. இதுபோன்ற விஷயங்களை அறிந்துக் கூறுவது நட்சத்திர (வானசாஸ்திர) கல்வில் சேராது. மாறாக இது (வானவியல் கல்வி) அனுமதிக்கப்பட்ட கல்வியாகும். அல்லாஹ் சூரியனையும், சந்தரினையும் கணக்கீடு செய்வதற்காகவே படைத்துள்ளான். அல்லாஹ் கூறுகிறான்,
هُوَ الَّذِىْ جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَّالْقَمَرَ نُوْرًا وَّقَدَّرَه مَنَازِلَ لِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَ‌ مَا خَلَقَ اللّٰهُ ذٰلِكَ اِلَّا بِالْحَـقِّ‌ يُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْلَمُوْنَ‏
10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.
(சூரா யுனூஸ் வசனம் - 5)
இந்த கல்விக்கே இல்முத் தஸ்யீர் என சொல்லப்படும்.
இமாம் கத்தாபி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள், நட்சத்திர(வானவியல்) கல்வியை அறிந்து சூரியன் உச்சை அறிவதற்கும், கிப்லாவை அறிவதற்கும் அதனை பயன்படுத்துவது தடுக்கப்பட்ட கல்வியில் வராது. அனுமதிக்கப்பட்ட கல்வியில் வரும்! (அல்லாஹ் மிக அறிந்தவன்)
அவ்வாறே திசையை அறிவதற்கு நட்சத்திர( வானவியல்) கல்வியை கற்பதில் எவ்வித தடையும் இல்லை. அல்லாஹ் கூறுகிறான்,
وَعَلامَاتٍ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُونَ
(வழிகாட்டும்) அடையாளங்களையும் (வழி காட்டுவதற்காக அவன் அமைத்துள்ளான்); நட்சத்திரங்களைக் கொண்டும் (பிரயாணிகளாகிய) அவர்கள் வழிகளை அறிந்து கொள்கிறார்கள். (சூரா அந்நஹ்ல் வசனம் 16)
இமாம் இப்னு ரஜப் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள், இல்மு தஸ்யீர் என்னும் (வானவியல்) கல்வியை கொண்டு தேவைக்களுக்கான வழிகள், கிப்லாவை அறிந்துக் கொள்வது நான்கு இமாம்களிடத்திலும் அனுமதிக்கப்பட்டதாகும். இவற்றை தவிர்த்து மற்ற விஷயங்களுக்கு அக்கல்வி அவசியமற்றதாகும்.
இமாம் புகாரி ரஹ் அவர்கள் தனது ஸஹிஹுல் புகாரியில் கதாதா ரஹ் அவர்களின் கூற்றை பதிவு செய்துள்ளார்கள். அதில் பாடம் : 3 நட்சத்திரங்கள்.

நாம் (உங்களுக்கு) அருகிலிருக்கும் (முதல்) வானத்தை விளக்குகளால் அலங்கரித்திருக்கின்றோம். மேலும், அவற்றை ஷைத்தான்களை எறிந்து விரட்டும் கருவிகளாக ஆக்கியுள்ளோம். இந்த ஷைத்தான்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார் செய்து வைத்திருக்கின்றோம்என்னும் (
ஸூரத்துல் முல்க் 67:5

இறை வசனத்திலிருந்து அல்லாஹ் இந்த நட்சத்திரங்களை மூன்று விஷயங்களுக்காகப் படைத்திருக்கின்றான் என்று தெரிய வருகின்றது:
1-அவற்றை வானத்திற்கு அலங்காரமாக ஆக்கியுள்ளான்.
2-ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவியாக ஆக்கியுள்ளான்.
3-அவற்றின் வாயிலாக வழியறிந்து கொள்வதற்கான அடையாளங்களாக அவற்றை ஆக்கியுள்ளான்.

எவர் இதுவல்லாத பிற பொருள் களை இந்த வசனத்திற்குக் கற்பிக்கின்றாரோ அவர் தவறிழைத்து விட்டார்; தன் முயற்சியை வீணாக்கி விட்டார்; தான் அறியாத விஷயத்தில் ஈடுபட்டுத் தன்னைத் தானே சிரமத்திற்கு ஆளாக்கிக் கொண்டார் என்று கதாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் (புகாரி)

بَاب فِي النُّجُومِ وَقَالَ قَتَادَةُ وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ خَلَقَ هَذِهِ النُّجُومَ لِثَلَاثٍ [ ص: 1169 ] جَعَلَهَا زِينَةً لِلسَّمَاءِ وَرُجُومًا لِلشَّيَاطِينِ وَعَلَامَاتٍ يُهْتَدَى بِهَا فَمَنْ تَأَوَّلَ فِيهَا بِغَيْرِ ذَلِكَ أَخْطَأَ وَأَضَاعَ نَصِيبَهُ وَتَكَلَّفَ مَا لَا عِلْمَ لَهُ بِهِ وَقَالَ ابْنُ عَبَّاسٍ هَشِيمًا مُتَغَيِّرًا وَالْأَبُّ مَا يَأْكُلُ الْأَنْعَامُ وَالْأَنَامُ الْخَلْقُ بَرْزَخٌ حَاجِبٌ وَقَالَ مُجَاهِدٌ أَلْفَافًا مُلْتَفَّةً وَالْغُلْبُ الْمُلْتَفَّةُ فِرَاشًا مِهَادًا كَقَوْلِهِ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ نَكِدًا قَلِيلًا(http://library.islamweb.net/newlibrary/display_book.php?idfrom=3030&idto=3030&bk_no=0&ID=2016)

மழை பெய்வதற்கான நேரத்தை வானவியல் கல்வியை கொண்டு முன்கூட்டியே அறிவது சாத்தியமற்றதாகும். ஏனெனில் மழை பொழிவது அல்லாஹ் மட்டுமே அறிந்திருக்கின்ற மறைவான ஞானத்தில் வரக்கூடியதாகும். எனவே அதனை நட்சத்திர சாஸ்திரத்தின் அடிப்படையில் கூறுவது அறியாமைக்காலத்தில் பார்க்கப்பட்டத்தை (குஃப்ரா) போன்றதாகும்.
விவசாய அறுவடை தொடர்பான விஷயங்களை அறிவது கால நிலைகளை அறிவதுடன் தொடர்புடையதாகும். அதனை கணக்கிட்டு அறிந்துக் கொள்வதில் தவறில்லை. அது வானசாஸ்திரத்தில் வராது!

http://fatawa.alukah.net/content/784

குறிப்பு::
"فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا، وَادْعُوا، حَتَّى يُكْشَفَ مَا بِكُمْ"
நபி صلى الله عليه و سلم அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் கிரகணங்களைக் கண்டால் தொழுங்கள். அவை விலகும் வரை பிரார்த்தியுங்கள்’  [ஸஹீஹ் அல்-புகாரி 1040]
எனவே கிரகணங்கள் ஏற்படுவதை கண்களினால் பார்த்து தொழுவது தான் நபி வழியாகும்.

The eclipse prayer is prescribed when one sees an eclipse, not when one hears news of an eclipse from the astronomers  https://islamqa.info/en/20368


https://islamqa.info/ar/22445   
http://alifta.com/Fatawa/FatawaChapters.aspx?languagename=ar&View=Page&PageID=2888&PageNo=1&BookID=3



https://islamqa.info/en/22445
http://alifta.com/Fatawa/FatawaChapters.aspx?languagename=en&View=Page&PageID=2878&PageNo=1&BookID=7


மொழியாக்கம்::  ஹசன் அலி உமரி
https://www.facebook.com/photo.php?fbid=1940938479492244&set=a.1402492350003529.1073741827.100007283322935&type=3

Tuesday, November 28, 2017

Self Ruqya

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

1) It was narrated that Aishah (ra) said:
The Messenger of Allah (ﷺ) commanded me, or he commanded (the people) to use Ruqyah to deal with the evil eye.
Bukhari 5279

2) Reciting the Last 3 Surahs of Quran (Nas Falaq Ikhlas)

Narrated 'Aisha:
Whenever the Prophet (ﷺ) went to bed every night, he used to cup his hands together and blow over it after reciting Surat Al-Ikhlas, Surat Al-Falaq and Surat An-Nas, and then rub his hands over whatever parts of his body he was able to rub, starting with his head, face and front of his body. He used to do that three times.
Sahih al-Bukhari 5017

3) Recitation of Baqarah

Abu Huraira reported Allah's Messenger (ﷺ) as saying:
Do not make your houses as graveyards. Satan runs away from the house in which Surah Baqarah is recited.
Sahih Muslim 780

4) Last two verses of Baqarah

Narrated Abu Mas'ud:
The Prophet (ﷺ) said, "If somebody recited the last two Verses of Surat Al-Baqara at night, that will be sufficient for him."
Sahih al-Bukhari 5009

5) Ayatal Kursi

Narrated Abu Huraira:
Allah's Messenger (ﷺ) ordered me to guard the Zakat revenue of Ramadan. Then somebody came to me and started stealing from the foodstuff. I caught him and said, "I will take you to Allah's Messenger (ﷺ)!" Then Abu Huraira described the whole narration and said: That person said (to me), "(Please don't take me to Allah's Messenger (ﷺ) and I will tell you a few words by which Allah will benefit you.) When you go to your bed, recite Ayat-al-Kursi, (2.255) for then there will be a guard from Allah who will protect you all night long, and Satan will not be able to come near you till dawn." (When the Prophet (ﷺ) heard the story) he said (to me), "He (who came to you at night) told you the truth although he is a liar; and it was Satan."
Sahih al-Bukhari 5010

6) Reciting Fathia
Some of the companions of the Prophet (ﷺ) passed by some people staying at a place where there was water, and one of those people had been stung by a scorpion. A man from those staying near the water, came and said to the companions of the Prophet, "Is there anyone among you who can do Ruqya as near the water there is a person who has been stung by a scorpion." So one of the Prophet's companions went to him and recited Surat-al-Fatiha for a sheep as his fees. The patient got cured and the man brought the sheep to his companions who disliked that and said, "You have taken wages for reciting Allah's Book." When they arrived at Medina, they said, ' O Allah's Messenger (ﷺ)! (This person) has taken wages for reciting Allah's Book" On that Allah's Messenger (ﷺ) said, "You are most entitled to take wages for doing a Ruqya with Allah's Book."
Sahih al-Bukhari 5737

7) Dua against Evil Eye and Devil

Narrated Ibn `Abbas:
The Prophet (ﷺ) used to seek Refuge with Allah for Al-Hasan and Al-Husain and say: "Your forefather (i.e. Abraham) used to seek Refuge with Allah for Ishmael and Isaac by reciting the following:

Auzuubika Limatil Lahil Tammati Min Kulli Shaitanin Wa Hammah Wa Min Kulli Aynin Lammah

'O Allah! I seek Refuge with Your Perfect Words from every devil and from poisonous pests and from every evil, harmful, envious eye.' "
Sahih al-Bukhari 3371

8) Dua for removal of harm and healing of disease

Narrated Abdullah ibn Mas'ud:
Zaynab, the wife of Abdullah ibn Mas'ud, told that Abdullah said: I heard the Messenger of Allah (ﷺ) saying: spells, charms and love-potions are polytheism.
I asked: Why do you say this? I swear by Allah, when my eye was discharging I used to go to so-and-so, the Jew, who applied a spell to me. When he applied the spell to me, it calmed down. Abdullah said:
That was just the work of the Devil who was picking it with his hand, and when he uttered the spell on it, he desisted. All you need to do is to say as the Messenger of Allah (ﷺ) used to say:

‘Adhhib il-ba’s Rabb al-naas ishfi anta al-Shaafi laa shifaa’a illa shifaa’uka shifaa’an laa yughaadiru saqaman

Remove the harm, O Lord of men, and heal. Thou art the Healer. There is no remedy but Thine which leaves no disease behind.
Sunan Abi Dawud 3883

9) Dua recited by Jibrael (AS) when the Prophet fell ill

It was narrated from Abu Sa’eed that Jibra’il came to the Prophet (ﷺ) and said:
“O Muhammad, you are ill. He said: ‘Yes.’ He said:

Bismillahi Arqika, Min Kulli Shay’in Yu’dhika, Min Sharri Kulli Nafsin Aw ‘Aynin Aw Hasidin. Allahu Yashfika, Bismillahi Arqika

(In the Name of Allah I perform Ruqyah for you, from everything that is harming you, from the evil of every soul or envious eye, may Allah heal you. In the Name of Allah I perform Ruqyah for you).
Sunan Ibn Majah 3523

10) Protection from Devil from All sides

It was narrated that Ibn 'Umar said:
"The Messenger of Allah (ﷺ) never abandoned these supplications, every morning and evening:

Allahumma inni as'alukal-'afwa wal-'afiyah fid-dunya wal-akhirah. Allahumma inni as'alukal-'afwa wal-'afiyah fi dini wa dunyaya wa ahli wa mali. Allahum-mastur 'awrati, wa amin raw'ati wahfazni min bayni yadayya, wa min khalfi, wa 'an yamini wa 'an shimali, wa min fawqi, wa 'audhu bika an ughtala min tahti

(O Allah, I ask You for forgiveness and well-being in this world and in the Hereafter. O Allah, I ask You for forgiveness and well-being in my religious and my worldly affairs. O Allah, conceal my faults, calm my fears, and protect me from before me and behind me, from my right and my left, and from above me, and I seek refuge in You from being taken unaware from beneath me)."
Sunan Ibn Majah 3871

Source:  https://www.facebook.com/Huda.Tv/photos/a.207242186863.131256.52580251863/10155167737031864/?type=3

Monday, October 16, 2017

தொழுகக்கு பிறகு சுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

தொழுகக்கு பிறகு எத்துணை முறை சுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் கூற வேண்டும்.
பொதுவாக நாம் அறிந்தது 33 தடவை என்று. சிலர் மிக வேகமாக சு சு சு என்று மட்டும் கூறுவதையும் கேட்கலாம்.
1. சுப்ஹானல்லாஹ் -33 முறை அல்ஹம்து லில்லாஹ் -33 அல்லாஹு அக்பர் -33 லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்" 1- தடவை
பலன்:: அவருடைய (சிறு) பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுகின்றன. அவை கடலின் நுரையளவு இருந்தாலும் சரியே! [ஸஹீஹ் முஸ்லிம் : 1048]
2. சுப்ஹானல்லாஹ்-33 அல்ஹம்து லில்லாஹ்-33 முறை அல்லாஹு அக்பர் -34 [ஸஹீஹ் முஸ்லிம் : 1046]
3. சுப்ஹானல்லாஹ்-33 அல்ஹம்து லில்லாஹ்-33 முறை அல்லாஹு அக்பர் -33 [ஸஹீஹ் முஸ்லிம் : 1044]
பலன்:: உங்களை முந்தி விட்டவர்களையும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களையும் நீங்கள் எட்டிவிடுவீர்கள். உங்களைவிட வேறெவரும் சிறந்தவர்களாக ஆகிவிட முடியாது; உங்களைப் போன்று அவர்களும் செயல்படுத்தினால் தவிர
4. சுப்ஹானல்லாஹ்-25 அல்ஹம்து லில்லாஹ்-25 முறை அல்லாஹு அக்பர் -25 [நஸயி : 1351]
5. சுப்ஹானல்லாஹ்-10 அல்ஹம்து லில்லாஹ்-10 முறை அல்லாஹு அக்பர் -10 [ஸஹீஹ் புகாரி : 6329]

Friday, September 8, 2017

தற்செயலாக துவா செய்வதும், ஆமீன் சொல்வது நபி வழியாகும்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்


ஒருவர் துவா செய்ய , அருகாமையில் உள்ளவர் ஆமீன் கூறுவது, கூட்டு துவா என்கிறோம். கூட்டு துவா என்றாலே பித்அத் என்பது சிலரின் கருத்து. ஒவ்வொரு தொழுக்கு பிறகும் அல்லது எதுக்ககெடுத்தாலும் கூட்டு துவா என்பது பலரின் கருத்து. இரண்டுமே Extreme views . எப்பொழுதாவது, சில தருணங்களில்  துவா செய்வதும், ஆமீன் சொல்வது நபி வழி.

நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்கு பிறகு தனித்தனியாகவோ கூட்டாவாக்வோ வழமையாக துவா செய்ததாக எந்த ஆதாரம் இல்லை

எப்பொழுதாவது, சில தருணங்களில் துவா செய்வதும், ஆமீன் சொல்வது நபி வழியாகும் என்பதற்கு சில ஆதாரங்கள்
1. 
நபி (ஸல்) அவர்கள் அனைவரும் மிம்பருக்கு (அருகில்) வாருங்கள் என்று கூறினார்கள். நாங்கள் அனைவரும் ஆஜரானோம்.  அப்போது முதல் படியில் ஏறும் போது "ஆமீன்'' என்று கூறினார்கள். இரண்டாவது படியில் ஏறும் போதும் "ஆமீன்'' என்று கூறினார்கள். மூன்றாவது படியில் ஏறும் போதும் "ஆமீன்'' என்று கூறினார்கள். அவர்கள் இறங்கிய உடன் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் (என்றைக்குமே) கேள்விப்படாத ஒன்றை இன்று உங்களிடமிருந்து செவியேற்றோமே என்று கேட்டோம்.
நான் முதல் படியில் ஏறும் போது ஜிப்ரீல் (அலை) எனக்கு காட்சி தந்து யார் இரமலான் மாதத்தை அடைந்தும் அவன் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள் நான் ஆமீன் என்றேன். நான் இரண்டாவதில் ஏறும் போது யாரிடத்தில் (முஹம்மதாகிய) நீங்கள் நினைவுகூறப்பட்டும் அவன் உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள் நான் ஆமீன் என்று கூறினேன். நான் மூன்றாவதில் ஏறும் போது ஒருவனிடத்தில் அவனுடைய பெற்றோர்கள் வயோதிகப் பருவத்தை அடைந்து (அவர்களுக்கு பணிவிடை செய்வதின் மூலம்) அந்த இருவரும் இவனை சுவர்கத்தில் நுழைவிக்கவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும் என்றார்கள். நான் ஆமீன் என்று கூறிúன்ன் என்றார்கள்.
நூல் : ஹாகிம் (7256), ஸஹீஹ் இப்ன் குஸைமா: 1786,  ஸஹீஹ் இப்ன் ஹிப்பான் 414, 915, 916

(حديث مرفوع) حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ ، أنا ابْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي سُلَيْمَانُ وَهُوَ ابْنُ بِلالٍ ، عَنْ كَثِيرِ بْنِ زَيْدٍ ، عَنِ الْوَلِيدِ بْنِ رَبَاحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَقِيَ الْمِنْبَرَ ، فَقَالَ : " آمِينَ ، آمِينَ ، آمِينَ " ، فَقِيلَ لَهُ : يَا رَسُولَ اللَّهِ ، مَا كُنْتَ تَصْنَعُ هَذَا ؟ ! فَقَالَ" قَالَ لِي جِبْرِيلُ : أَرْغَمَ اللَّهُ أَنْفَ عَبْدٍ أَوْ بَعُدَ دَخَلَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ ، فَقُلْتُ : آمِينَ . ثُمَّ قَالَ : رَغِمَ أَنْفُ عَبْدٍ أَوْ بَعُدَ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ أَحَدَهُمَا لَمْ يُدْخِلْهُ الْجَنَّةَ ، فَقُلْتُ : آمِينَ . ثُمَّ قَالَ : رَغِمَ أَنْفُ عَبْدٍ أَوْ بَعُدَ ، ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ ، فَقُلْتُ : آمِينَ "


2.
فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَـفِرِينَ
காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக [ஸூரத்துல் பகரா 2:286]
அபூஇஸ்ஹாக்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: முஆத் பின் ஜபன்(ரலி) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதி முடுக்கிம்போது 'ஆமீன்' கூறுவார்கள். இதை இப்ன் ஜரீர்(ரஹி) அவர்கள் அறிவிக்கிறார்கள். [தஃப்ஸீர் இப்ன் கதீர்]

3.
وَقَالَ مُوسَىٰ رَبَّنَا إِنَّكَ آتَيْتَ فِرْعَوْنَ وَمَلَأَهُ زِينَةً وَأَمْوَالًا فِي الْحَيَاةِ الدُّنْيَا رَبَّنَا لِيُضِلُّوا عَنْ سَبِيلِكَ ۖ رَبَّنَا اطْمِسْ عَلَىٰ أَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلَىٰ قُلُوبِهِمْ فَلَا يُؤْمِنُوا حَتَّىٰ يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ
قَالَ قَدْ أُجِيبَتْ دَعْوَتُكُمَا
மூஸா (தன் இறைவனை நோக்கி,) "என் இறைவனே! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய மக்களுக்கும் (ஆடம்பர) அலங்காரங்களையும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருள்களையும் அளித்திருக்கிறாய். ஆகவே, எங்கள் இறைவனே! அவர்கள் (அவற்றைக் கொண்டு மற்ற மனிதர்களை) உன்னுடைய வழியிலிருந்து திருப்பி விடுகின்றனர். எங்கள் இறைவனே! அவர்களின் பொருள்களை நாசமாக்கி, அவர்களுடைய உள்ளங்களையும் கடினமாக்கி விடு. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் (கண்ணால்) காணும் வரையில், அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்" என்று பிரார்த்தித்தார்.
அதற்கு (இறைவன், "மூஸா ஹாரூனே!) உங்கள் இருவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது.  [10:88-89]
மூஸா (தன் இறைவனை நோக்கி)… 
மூஸா(அலை) அவர்கள் பிரார்தனை செய்ய, அவர்களுடைய சகோதரர் ஹாரூன்(அலை) அவர்கள் அமினொ சொல, அல்லாஹ்வும் நித் பிரார்த்தனையை ஏற்றான். “உங்கள் இருவரின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டு விட்டது” ..  [தஃப்ஸீர் இப்ன் கதீர்]

4. 
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، عَنْ هِلاَلِ بْنِ خَبَّابٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا مُتَتَابِعًا فِي الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ وَصَلاَةِ الصُّبْحِ فِي دُبُرِ كُلِّ صَلاَةٍ إِذَا قَالَ "‏ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏"‏ ‏.‏ مِنَ الرَّكْعَةِ الآخِرَةِ يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ بَنِي سُلَيْمٍ عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَعُصَيَّةَ وَيُؤَمِّنُ مَنْ خَلْفَهُ 
நபி (ஸல்) அவர்கள் லுஹர், அஸர், மக்ரிப், சுப்ஹ் ஆகிய அனைத்து தொழுகைக்குப் பிறகும் தொடர்ந்து ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். இரண்டாவது ரக்அத்தில் ஸமியல்லாஹுலிமன் ஹமிதா என்று அவர்கள் சொல்லும் போது பனூ சுலைம் கிளையினரைச் சார்ந்த ரிஃல், தக்வான் உஸைய்யா ஆகிய கிளையினருக்கு எதிராகப் பிரார்த்தனை செய்வார்கள். அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் ஆமீன் சொல்வார்கள். (ஆதாரம்: அபூதாவூத் 1231 ஹஸன் (அல்பானி) ,அஹ்மத் 2610)

5.
حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ‏:‏ أَخْبَرَنَا عَبْدُ اللهِ، قَالَ‏:‏ أَخْبَرَنَا حَزْمٌ قَالَ‏:‏ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ قُرَّةَ يَقُولُ‏:‏ لَمَّا وُلِدَ لِي إِيَاسٌ دَعَوْتُ نَفَرًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَطْعَمْتُهُمْ، فَدَعَوْا، فَقُلْتُ‏:‏ إِنَّكُمْ قَدْ دَعَوْتُمْ فَبَارَكَ اللَّهُ لَكُمْ فِيمَا دَعَوْتُمْ، وَإِنِّي إِنْ أَدْعُو بِدُعَاءٍ فَأَمِّنُوا، قَالَ‏:‏ فَدَعَوْتُ لَهُ بِدُعَاءٍ كَثِيرٍ فِي دِينِهِ وَعَقْلِهِ وَكَذَا، قَالَ‏:‏ فَإِنِّي لَأَتَعَرَّفُ فِيهِ دُعَاءَ يَوْمِئِذٍ‏.‏
முஆவியா இப்ன் குர்ரா ரஹிமஹுல்ல்லாஹ் கூறுகிறார்கள், "எனது பிள்ளை இயாஸ் பிறந்தபோது நபித்தோழர்கள் சிலரை அழைத்து விருந்தளித்தேன். பிறகு அவர்கள் எனது பிள்ளைக்காக துஆ செய்தார்கள். அதற்கு நான், "நீங்கள் துஆச் செய்தீர்கள். எனவே அல்லாஹ் உங்களுக்கு பரகத் செய்வானாக! இப்பொழுது நான் சில துஆக்களைக் கேட்கிறேன், நீங்கள் ஆமீன் கூறுங்கள்", என்று கூறிவிட்டு குழந்தையின் மார்கம், இன்னும் அறிவு சார்ந்த பல விடயங்களுக்காக நான் துஆச் செய்தேன். நிச்சயமாக அன்றுதான் நான் அந்த விடயத்தில் துஆ உள்ளது என்பதை அறிந்து கொண்டேன். [இமாம் புகாரி(ரஹ்) அவர்களின் அதப் அல்முஃப்ரத் 1255  ஸஹீஹ் (அல்பானி)]


மேலும் காண்க: https://islamqa.info/en/93757

Friday, August 25, 2017

பரகத்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

ஸஹீஹ் புகாரி 6452.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்:
எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அத்தகைய அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் (கடும்) பசியினால் என் வயிற்றைத் தரையில் வைத்து அழுத்திக்கொண்டு படுத்திருக்கிறேன். மேலும், (கடும்) பசியினால் வயிற்றில் நான் கல்லை வைத்துக் கட்டிக் கொண்டதுமுண்டு. ஒரு நாள் நான் நபி(ஸல்) அவர்களும் தோழர்களும் (பள்ளிவாசலுக்குச்) செல்லும் பாதையில் அமர்ந்துகொண்டேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என்னைக்) கடந்து சென்றார்கள். உடனே நான் இறைவேதத்திலுள்ள ஒரு வசனத்தைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். என் வயிற்றை அவர்கள் நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கடந்து சென்றார்கள்; (என் பசி நீங்க எதுவும்) அவர்கள் செய்யவில்லை. பிறகு உமர்(ரலி) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். உடனே நான் அவர்களிடமும் இறைவேதத்திலுள்ள ஒரு வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் என் வயிற்றை நிரப்புவார்கள் என்பதற்காகவே (அது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அவர்களும் (என் பசியைப் போக்க) ஒன்றும் செய்யாமல் போய்விட்டார்கள்.
பிறகு அபுல்காசிம் (நபி-ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். என்னைக் கண்டு, எனக்கு ஏற்பட்டுள்ள (பசி) நிலையையும் என் முகமாற்றத்தையும் அவர்கள் புரிந்துகொண்டு புன்னகைத்தார்கள். பிறகு, 'அபூ ஹிர்ரே! (அபூ ஹுரைராவே!) என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; இறைத்தூதர் அவர்களே!' என்றேன். '(என்னைப்) பின்தொடர்ந்து வா!' என்று சொல்லிவிட்டு நடந்தார்கள். நான் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றேன். நபி(ஸல்) அவர்கள் (தம் இல்லத்தில்) நுழைந்தார்கள். நான் (உள்ளே செல்ல) அனுமதி கோர, எனக்கு அனுமதியளித்தார்கள். நான் உள்ளே சென்றேன். அப்போது (வீட்டில்) ஒரு கோப்பையில் பாலைக் கண்டார்கள். உடனே (தம் துணைவியாரிடம்) 'இந்தப் பால் எங்கிருந்து வந்தது?' என்று கேட்டார்கள். அவர்கள் 'இன்ன 'ஆண்' அல்லது 'பெண்' தங்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஹுர்' என அழைத்தார்கள். நான் 'இதோ வந்துவிட்டேன்; இறைத்தூதர் அவர்களே!' என்றேன். 'திண்ணைவாசிகளிடம் சென்று என்னிடம் அவர்களை அழைத்துவாருங்கள்' என்றார்கள்.
திண்ணைவாசிகள் (அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா) இஸ்லாத்தின் விருந்தினர்கள் ஆவர். அவர்கள் புகலிடம் தேட அவர்களுக்குக் குடும்பமோ செல்வமோ கிடையாது. வேறு யாரிடமும் செல்லவுமாட்டார்கள். நபி(ஸல்) அவர்களிடம் ஏதேனும் தானப்பொருள்கள் வந்தால் அதனை இவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அனுப்பிவிடுவார்கள். அதிலிருந்து தாம் எதையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். தம்மிடம் ஏதேனும் அன்பளிப்புப் பொருள்கள் வந்தால் இவர்களைத் தம்மிடம் அழைத்துவரும்படி ஆளனுப்பிவிடுவார்கள். (அவர்கள் வந்தவுடன்) அவர்களுடன் சேர்ந்து தாமும் உண்பார்கள்.
இப்போது நபி(ஸல்) அவர்கள் (திண்ணைவாசிகளை அழைத்துவரச்) சொன்னதால் எனக்குக் கவலைதான் ஏற்பட்டது. '(இருப்பதோ சிறிதளவு பால்.) திண்ணைவாசிகளுக்கு இந்தப் பால் எம்மாத்திரம்? இதைச் சிறிதளவு பரும் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு நானே பொருத்தமானவன். திண்னை வாசிகள் வந்தால், நபியவர்கள் எனக்கு உத்தரவிட, நானே அவர்களுக்குக் கொடுத்துவிட்டு (இறுதியில்) எனக்கு இந்தப் பாலில் ஒன்றும் கிடைக்காமல் போகலாம். இருப்பினும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியாமல் இருக்க இயலாது' என (மனத்துக்குள்) சொல்லிக் கொண்டேன்.
பிறகு, நான் திண்ணைவாசிகளிடம் சென்று அவர்களை அழைத்தேன். அவர்களும் (அழைப்பை ஏற்று) வந்து (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கோரினார்கள். நபி(ஸல்) அவர்கள் திண்ணைவாசிகளுக்கு அனுமதி வழங்கினார்கள். அவர்கள் அந்த வீட்டில் ஆங்காங்கே இடம்பிடித்து அமரலானார்கள். நபி(ஸல்) அவர்கள் 'அபூ ஹிர்' என அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'இதை எடுத்து இவர்களுக்குக் கொடுங்கள்' என்றார்கள். நான் அந்தக் கோப்பையை எடுத்து ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். அவர் தாகம் தணியும் வரை குடித்தார். பிறகு அவர் என்னிடம் அந்தக் கோப்பையைத் திருப்பித் தந்தார். நான் அதை இன்னொரு மனிதரிடம் கொடுத்தேன். அவரும் தாகம் தீரும் வரை குடித்துவிட்டுக் கோப்பையை என்னிடம் தந்தார். பிறகு இன்னொருவர் தாகம் தீரும் வரை குடித்தார். பிறகு என்னிடம் அதைத் திருப்பித் தந்தார். இறுதியில் நான் நபி(ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்றேன். அப்போது மக்கள் அனைவரும் தாகம் தணிந்திருந்தினர். நபி(ஸல்) அவர்கள் அந்தக் கோப்பையை வாங்கித் தம் கையில் வைத்துக்கொண்டு என்னைக் கூர்ந்துப் பார்த்துப் புன்னகைத்தார்கள். பிறகு 'அபூ ஹிர்!' என்று அழைத்தார்கள். நான் 'இதோ காத்திருக்கிறேன்; கூறுங்கள் இறைத்தூதர் அவர்களே!' என்று சொன்னேன். அதற்கவர்கள் 'நானும் நீங்களும் (மட்டும் தான்) எஞ்சியுள்ளோம் (அப்படித்தானே?)' என்று கேட்டார்கள். நான் 'இறைத்தூதர் அவர்களே! (ஆம்.) உண்மைதான்' என்றேன். நபி(ஸல்) அவர்கள் 'உட்கார்ந்து (இதைப் பருகுங்கள்' என்றார்கள். நான் உட்கார்ந்து பரும்னேன். 'இன்னும் பருகுங்கள்' என்றார்கள். பரும்னேன். இவ்வாறு அவர்கள் 'பருகுங்கள்' என்று சொல்லிக்கொண்டேயிருக்க, நான் பரும்க்கொண்டேயிருந்தேன். இறுதியில் 'இல்லை; சத்திய (மார்க்க)த்தைக் கொண்டு தங்களை அனுப்பிவைத்த (இறை)வன் மீது ஆணையாக! இனிப் பருகுவதற்கு வழியே இல்லை' என்றேன். நபி(ஸல்) அவர்கள் '(சரி) அதை எனக்குக் காட்டுங்கள்' என்றார்கள். எனவே, நான் அவர்களிடம் அந்தக் கோப்பைக் கொடுத்தேன். உடனே அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுடைய (திருப்)பெயர் கூறி எஞ்சியதைப் பரும்னார்கள்.


ஸஹீஹ் புகாரி 4102.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
(போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, 'நபி(ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப் போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா?' என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதில் ஒரு 'ஸாவு' அளவு வாற்கோதுமையிலிருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக்குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தாள். நான் (அறுத்து) முடிக்கும்போது அவளும் (அரைத்து) முடித்துவிட்டாள். மேலும் அதனைத் துண்டுகளாக்கி அதற்கான சட்டியிலிட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தேன். (நான் புறப்படும்போது என் மனைவி,) 'இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப்படுத்திவிடவேண்டாம். ('உணவு கொஞ்சம் தானிருக்கிறது' என்று கூறிவிடுங்கள்)' என்று சொன்னாள். நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இரகசியமாக, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்து, எங்களிடம் இருந்த ஒரு 'ஸாவு' அளவு வாற்கோதுமையை அரைத்தும் வைத்துள்ளோம். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள்' என்று அழைத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் உரத்த குரலில், 'அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள்' என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஜாபிர் - ரலி - அவர்களிடம்), 'நான் வரும் வரை நீங்கள் சட்டியை (அடுப்பிலிருந்து) இறக்கவேண்டாம். உங்கள் குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம்' என்று கூறினார்கள். நான் திரும்பி வந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தார்கள். நான் மனைவியிடம் வந்து சேர்ந்தேன். (நபி - ஸல் - அவர்கள் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) என்னைக் கடிந்து கொண்டாள். உடனே நான், 'நீ நபி(ஸல்) அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன்' என்று கூறினேன். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தாள். நபி(ஸல்) அவர்கள் அதில் (தம் திரு வாயினால்) உமிழ்ந்தார்கள். மேலும், மாவில் பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள். பிறகு அதில் உமிழ்ந்து பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், (என் மனைவியை நோக்கி), 'ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழை. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே' என்று கூறினார்கள். அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவைவிட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்தமெழுப்பியவாறு கொதித்துக கொண்டிருந்தது. அது (கொஞ்சம் குறையாமல்) முன்பிருந்தது போன்றே இருந்தது. மேலும், எங்கள் குழைத்தமாவும் (கொஞ்சமும் குறைந்து விடாமல்) முன்பு போன்றே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது.


ஸஹீஹ் முஸ்லிம் 4143.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "ஒரு பகல்" அல்லது "ஓர் இரவு" (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு, "பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!" என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியேவரச் செய்ததே என்னையும் வெளியேவரச் செய்தது" என்று கூறிவிட்டு, "எழுங்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.
அப்போது அந்த அன்சாரி வீட்டில் இருக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அந்தத் தோழரின் துணைவியார் கண்டதும், "வாழ்த்துகள்! வருக" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், "அவர் எங்கே?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண், "எங்களுக்காக நல்ல தண்ணீர் கொண்டுவருவதற்காக (வெளியே) சென்றுள்ளார்" என்று பதிலளித்தார்.
அப்போது அந்த அன்சாரி வந்துவிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களுடைய இரு தோழர்களையும் (தமது வீட்டில்) கண்டார். பிறகு "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இன்றைய தினம் மிகச் சிறந்த விருந்தினரைப் பெற்றவர் என்னைத் தவிர வேறெவரும் இல்லை" என்று கூறிவிட்டு, (திரும்பிச்) சென்று ஒரு பேரீச்சங்குலையுடன் வந்தார். அதில் நன்கு கனியாத நிறம் மாறிய காய்களும் கனிந்த பழங்களும் செங்காய்களும் இருந்தன. அவர், "இதை உண்ணுங்கள்" என்று கூறிவிட்டு, (ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பால் தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என உம்மை நான் எச்சரிக்கிறேன்"என்று கூறினார்கள்.
அவ்வாறே அவர்களுக்காக அவர் ஆடு அறுத்(து விருந்து சமைத்)தார். அவர்கள் அனைவரும் அந்த ஆட்டையும் அந்தப் பேரீச்சங்குலையிலிருந்தும் உண்டுவிட்டு (தண்ணீரும்) அருந்தினர். வயிறு நிரம்பி தாகம் தணிந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோரிடம், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! இந்த அருட்கொடை பற்றி மறுமை நாளில் நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். பசி உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது. பின்னர் இந்த அருட்கொடையை அனுபவித்த பிறகே நீங்கள் திரும்பிச் செல்கிறீர்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அபூபக்ர் (ரலி) அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் (ஓரிடத்தில்) அமர்ந்திருந்தபோது, அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, "இங்கு நீங்கள் இருவரும் அமர்ந்திருப்பதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும், "தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! பசிதான் எங்களை எங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றியது" என்று கூறினர்" என ஹதீஸ் துவங்குகிறது. மற்ற நிகழ்வுகள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.


Why iftar time varies by 1-3 minutes from astronomical sunset time

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ  Prayer timetables can differ by 1–2 minutes from the actual visible sunset for several technical re...