Wednesday, February 5, 2014

நல்லோரும் செய்யும் தவறு - முத்துமணி வைத்த கொலுசுகளை அணிதல்

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ


உங்களுடைய சிறுபிள்ளைகளுக்கும் மணிவைத்த கொலுசுகளை அணியாதீர்கள், ஏனென்றால் முத்துமணி உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள்

أَخْبَرَنَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسَلَّمٍ، قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ بَابَيْهِ، مَوْلَى آلِ نَوْفَلٍ أَنَّ أُمَّ، سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ جُلْجُلٌ وَلاَ جَرَسٌ وَلاَ تَصْحَبُ الْمَلاَئِكَةُ رُفْقَةً فِيهَا جَرَسٌ ‏"

நபி(ஸல்) அவர்களின் மனைவியான உம்மு ஸலமா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"எந்த வீட்டில் சிறிய சலங்கை மணி அல்லது பெரிய சலங்கை மணி இருக்கின்றதோ, அந்த வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள் என்றும்,  எந்த கூட்டத்துடன் சலங்கை மணி உள்ளதோ அவர்களுடன் வானவர்கள் துணை செய்ய மாட்டார்கள் என்றும் நான் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  அவர்களிடமிருந்து செவியுற்றேன்." -  ஸுனன் நஸயீ 5222 - ஸஹீஹ் (தாருஸ்ஸலாம்)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒலியெழுப்பும் மணி, ஷைத்தானின் இசைக் கருவியாகும். (முஸ்லிம்: 4295)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நாயும் மணியோசையும் உள்ள பயணிகளுடன் (அருள்) வானவர்கள் வரமாட்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்:4294)

ஆயிஷா(ரலி) முத்து மணிக்களை துண்டித்துவிட்டு வீட்டினுல் நுழைய அனுமதித்தார்கள்



حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ بُنَانَةَ، مَوْلاَةِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَسَّانَ الأَنْصَارِيِّ عَنْ عَائِشَةَ، قَالَتْ بَيْنَمَا هِيَ عِنْدَهَا إِذْ دُخِلَ عَلَيْهَا بِجَارِيَةٍ وَعَلَيْهَا جَلاَجِلُ يُصَوِّتْنَ فَقَالَتْ لاَ تُدْخِلْنَهَا عَلَىَّ إِلاَّ أَنْ تَقْطَعُوا جَلاَجِلَهَا وَقَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ تَدْخُلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ جَرَسٌ ‏"
حسن   (الألباني)
ஹஸ்ஸானின்  மகனான அப்துர் ரஹ்மான் அல்-அன்ஸாரி அவர்களின் பாதுகாவலில் இருந்த புனானா(பெண்) அறிவிக்கின்றார்கள்: நான் ஆயிஷா (ரலி) அவர்களுடன் இருந்த பொழுது, சலங்கை மணி அணிந்து கொண்டு பணிப்பெண் வந்தாள்.  "அவள் அந்த சலங்கை மணியை துண்டிக்கும் வரை உள்ளே நுழையவேன்டாம்" என தடுத்துவிட்டு, "எந்த வீட்டில் சலங்கை மணி உள்ளதோ அதில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் எண்று நான்  ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்றிருக்கிறேன் என்றார்கள்.  (ஸுனன் அபுதாவூத் - 4231 இதை ஷைக் அல்பானி (ரஹி) ஸஹீஹ் என்கிறார்கள்).

சில பெரிய பெண்பிளைகளும் அணிகின்றனர்

அங்காரத்தை வெளிபடுத்த வேண்டாம்!!!

وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ
தாங்கள் மறைத்து வைக்கும் அழங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். ஸூரத்துந் நூர் (24:31)


No comments:

காலை மாலை திக்ர்

 அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் 1. நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ{ஹரைரா அற்விக்கின்றார்கள், 'ஆயத...